துயரச்செய்தி – திரு நவரத்தினம் சின்னத்துரை (மணி)
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதி, நல்லூர் சங்கியன் வீதி திருவேரகம், பிரான்ஸ் Drancy, Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சின்னத்துரை அவர்கள் 09-09-2023 சனிக்கிழமை அன்று பாரிஸ், பிரான்ஸில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நவரத்தினம் தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தகுமார்(வரன்), ஜெயக்குமார்(ஜெயன்), அமிர்தினி(உமா), நந்தினி(உஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌசலா, குமுதினி, சுந்தர்ராஜன், தர்மகுலசிங்கம்(தம்பி) ஆகியோரின் அன்பு மாமனும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, அமிர்தலிங்கம், தனபாலசிங்கம், பஞ்சலிங்கம் மற்றும் மகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, புவனேஸ்வரி, கணேஸ்வதி மற்றும் கனகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணகம்பிகை காலஞ்சென்ற நல்லையா, காலஞ்சென்ற தவரசா- பவளம்மா, செல்வராணி-சிவயோகநாதன், செல்வரத்தினம்- சிவசோதி, செல்வராசா- அனுசியா, சிறிமுருகராசா- சிறிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிருஷன், நிரோகா, ஜெலானி, ஜெயமினி,ஜெரன், மது- சிலோஜினி, சனு- வித்தியா, ஆர்த்திகா, அகிலன், அனோஜன் அம்ரிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.