துயர செய்தி – செல்வன் துபாரகன் ஜெயராசா

யாழ். கோண்டாவில் மேற்கு. இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துபாரகன் ஜெயராசா அவர்கள் 08-03-2023 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம்(நடராசா), சிவபாக்கியம் தம்பதிகள், சின்னராசா இரத்தினம்மா தம்பதியகளின் அன்புப் பேரனும்,
ஜெயராசா சறோஜினிதேவி(றதி) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
யானு அவர்களின் பாசமிகு அண்ணாவும்,
நிரோசன் அவர்களின் மைத்துனரும்,
நேத்தன் அவர்களின் அன்பு மாமாவும்,
யோகேஸ்வரி(இணுவில்). சிவசுத்தானந்தம்(சிவா- கோண்டாவில்), சிவானந்தன்(கோண்டாவில்), ரூபன்(கனடா), ஆகியோரின் மருமகனும்,
கனகசுந்தரம்(கனடா) கணேசலிங்கம்(கனடா), றஞ்சனா(ஜேர்மனி), றாகினி(சுவிஸ்), ரூபி(கோண்டாவில்) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.