நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
ஆடி அமாவசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன ஆகும்? பித்ரு கடன் தீர்க்கும் வழி…
ஆடி அமாவாசையில் பித்ருகளுக்கு தர்பணம் செய்யாவிட்டால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகத்தில் அமாவாசை நாள் என்பது மிகவும் முக்கியமானதாகும். அதாவது சந்திரன் முழுவதும் தேய்ந்து போய், வானில் நிலா தோன்றாத நாளையே அமாவாசை நாள் என்று கூறுகின்றோம்.
இந்நாளில் முறையாக பித்ருக்களை(முன்னோர்களை) வழிபட வேண்டும். அவ்வாறு அவர்களை திருப்திபடுத்தாவிட்டால் வாழ்வில் பல துயரங்களை சந்திக்க நேரிடும்.
ஆடி அமாவாசையானது வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் நாளன்று வரும் நிலையில், ஆடி மாதம் முக்கியமான மாதமாகவும் பார்க்கப்படுகின்றது.
ஆடி மாதத்தில் அன்னை வழிபாடு மிகவும் முக்கியமானது. உலகின் சக்திகள் அனைத்துமே அன்னை பார்வதியிடம் ஐக்கியமாகிவிடுகிறது என்பது ஐதீகம், இந்த ஆடி மாதத்தில் பெண் தெய்வ வழிபாடு மட்டுமின்றி சிவனின் வழிபாடும் மிகவும் சிறந்தது.
வட இந்தியாவில் நதிக்கரைகளில் சிவன் வழிபாடு கோலாகலமாக இருக்கும் காக்கும் கடவுள் சிவன், அழிக்கும் தொழிலுக்கு அதிபதி என்பது நம்பிக்கை.
அவர், தற்போது ஆடி மாதத்தில் காக்கும் தொழிலையும் செய்யும்போது, இறந்துபோன் பித்ருக்களுக்கு காரியம் செய்தால், அவர்கள் பித்ருலோகத்தில் நிம்மதியாய் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
நபர் ஒருவர் இறந்த பின்பு 10வது நாள், 13வது நாள், 16வது நாள் என்று காரியம் செய்வார்கள். ஒரு ஆண்டு முடிந்த பின்பு அவர்கள் இறந்த தேதியில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது வழக்கமாகும்.
ஆண்டு திதி, மாதத் திதி என இறந்தவரின் திதிக்கு ஏற்ப செய்யும் காரியங்களைத் தவிர, மஹாலய அமாவாசை எனப்படும் ஆடி அமாவாசையில் திதி கொடுப்பது பித்ருக்களை சாந்திப்படுத்தும்
பித்ருக்களை சாந்திப்படுத்தும் ஆடி அமாவசை நாளன்று திதி கொடுப்பது, தர்ப்பணம் என சமய சடங்குகளும், அன்னதானம் போன்ற தானங்களை செய்து பசியாற்றும் முக்கியமான நாளாகும்.