இலங்கையில் திடீரென வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்!

இலங்கைக்கு இம்மாதத்தின் முதல் 13 நாட்களில் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டிற்கு மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 53,838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த சுற்றுலாப் பயணிகளில் 12,762 பேர் ரஷ்யாவிலிருந்து வந்தவர்கள் ஆவர்.
இந்தியாவிலிருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,289 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,937 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த வருடத்தில் 264,022 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.