நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
கை வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
கார் சாரதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் பாணந்துறை இரத்தினபுரி வீதியில் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
இவர் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
48 வயதுடைய மினுவாங்கொட கல்லொழுவை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாடகை வாகனத்தில் சென்ற தனது சகோதரர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என உயிரிழந்தவரின் சகோதரர் மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை அடுத்து இங்கிரிய பொலிஸாரால் சடலம் ஒன்று இருப்பதாக அறிவித்ததன் பேரில் ஹொரண வைத்தியசாலைக்கு சென்று அவரது சகோதரர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.