தொழிலை கைவிடும் நிலையில் கோழிப் பண்ணையாளர்கள்!

நாட்டில் நாளுக்கு நாள் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துச் செல்வதனால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பிரதேச கோழிப் பண்ணையாளர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
முன்னர், 3500 ரூபாவாக இருந்த கோழித் தீவனத்தின் விலை தற்பொழுது 18,000 ரூபாவாக அதிகரித்துள்ளமையினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக தற்பொழுது முட்டைகள் மற்றும் இறைச்சிகளை கொள்வனவு செய்யும் வீதம் அரைவாசியாகக் குறைந்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தீவனத்தின் விலையேற்றம் காரணமாக பலர் பண்ணையாளர்கள் தொழிலை கைவிட்டுவிட்டதாகவும் இதன்போது தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து இவ்வாறான நிலை ஏற்பட்டால் தாமும் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவதாக புத்தளம் பிரதேச பண்ணையாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இதனால், தீவணத்தின் விலையைக் குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பண்ணையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.