போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பயங்கர விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி… பரிதாபமாக உயிரிழந்த 3 வயது குழந்தை!
குருநாகல் மாவட்டம் – கடவல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
நீர்கொழும்பில் இருந்து மரதகஹமுல நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.