போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பாவனைக்குதவாத பருப்பை கழுவி விற்பனை; இருவர் கைது!
பொல்பிட்டிகம கூட்டுறவு களஞ்சியசாலையில் மீண்டும் மனித பாவனைக்கு உதவாத பருப்பு கையிருப்பு , கழுவப்பட்டு பதப்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொல்பிட்டிகம பொது சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்து 600 கிலோ பருப்புகளுடன் கடைக்காரர் மற்றும் முகாமையாளரை கைது செய்தனர்.
பொல்பித்திகம மற்றும் மடகல்ல கூட்டுறவு களஞ்சியசாலையில் உள்ள பருப்புகளில் புழுக்கள் இருந்தமையால் , அவை மனித நுகர்வுக்கு தகுதியற்றவையாக இருந்தது.
இது தொடர்பில் , பொல்பித்திகம பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ஜி.ஜி.என்.டி. கமகேவின் பணிப்புரையின் பேரில், பொல்பித்திகமவைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று இரண்டு இடங்களையும் சுற்றிவளைத்துள்ளது.
அதிகாரிகள் அங்கு சென்றபோதும் சில பருப்பு வகைகள் கழுவப்பட்டு வெயிலில் காயவைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். “இந்த கூட்டுறவு சங்கங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
பிடிபட்ட பருப்பு மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல என்பதையும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால் அவை மக்களுக்குக் கொடுப்பதற்காகக் கழுவி உலர்த்தப்படுவதில்லை. திருப்பி அனுப்புவதற்காகவே உலர்த்தப்பட்டது என கூறியுள்ளனர்.
எனினும் அவர்களின் கதையை ஏற்றுக்கொள்ளவே முடியாது என தெரிவித்த அதிகாரிகள் பருப்பு கையிருப்புடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.