நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மனைவி மற்றும் இரு பிள்ளைகளையும் காணவில்லை ; பொலிஸாரிடம் முறைப்பாடிட்ட கணவன்
வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் மனைவி ஒருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் 32 வயதான அ.அபிராமி என்னும் பெயருடைய தனது மனைவி, பிள்ளைகளான கம்சனா (வயது 11), சன்சிகன் (வயது 8) ஆகிய இருவரையும் கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
எனினும், குறித்த இரு மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை. மனைவியும் வீடு திரும்பவில்லை.
நானும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடிய நிலையில் அவர்கள் மூவரும் வீடு திரும்பவில்லை என கணவன் தன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மனைவியையும், இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான தகவல் கிடைத்தோர் 0765273860 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது வவுனியா பொலிசாருக்கோ தெரியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது