மற்றுமொரு மாதா சொரூபத்தின் கண்ணில் இருந்து வடியும் இரத்தம்; பார்க்க படையெடுக்கும் மக்கள்
ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தின் கண்ணில் இருந்து இரத்தம் வடிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் பலரும் ஆலயத்தை நோக்கி படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு பொதுமக்கள் அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் மாதா சொரூபம் ஒன்றில் இருந்து இரத்தம் வடிந்தமை குறிப்பிடத்தக்கது.