கனடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூன்று தமிழர்கள் வெற்றி!
யாழ்.நெல்லியடியில் 9 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம், நெல்லியடியில் 9 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லியடி துன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.