ரயிலுடன் கார் மோதி பயங்கர விபத்து: இருவர் உயிரிழப்பு! வெளியான புதிய தகவல்

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (16-03-2023) பிற்பகல் இடம்பெற்ற நிலையில் காரில் பயணித்த இருவரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்து இடம்பெற்ற விதம் அருகில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகல்தோட்டை புகையிரத கடவைக்கு அருகில் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் கார் மோதியுள்ளது.
காரில் அஹங்கம பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பேரனும் 80 வயதுடைய அவருடைய பாட்டியும் பயணித்த நிலையில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் கராபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.