ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
உயிரிழந்த சகோதரனுக்காக அன்னதானம் வழங்க சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!

கண்டி மாவட்டம் – ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (28-08-2022) காலை இடம்பெற்றுள்ளது.
ஹசலக்க, கங்கேயாய, பஹே எல குதியைச் சேர்ந்த அனுத்தரா இந்துனில் என்ற 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களுக்கு முன்பு இறந்த தனது சகோதரனுக்காக அன்னதானம் வழங்குவதற்காக தனது பெற்றோருடன் விகாரைக்கு சென்று கொண்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
பின்னர், ஹசலக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.