உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மே 18 ஆம் திகதியே சிறந்த நாள்; சிங்கள இளைஞனின் பதிவு

வடக்கு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற சிங்கள இளைஞர் ஒருவர், “மே 18ஆம் திகதியே தெற்கில் உள்ளோர் வடக்குக்கு வர சிறந்த நாளாகும்” என தனது முகநூல் பதிவில் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் இருக்கின்றோம். இது ஒரு புண்ணிய பூமி. உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து அவர்களின் உறவினர்கள் சுடர் ஏற்றி வழிபடுகின்றனர்” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இறுதிப் போரில், ஐக்கிய நாடுகளின் தகவலின்படி 70,000 பேருக்கும், சில மதிப்பீடுகளின்படி 150,000 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தப் போரில் அப்பாவி குடிமக்களே கொல்லப்பட்டனர் என்பதை நாம் மறக்கக்கூடாது. உயிரிழந்தவர்களுக்கு இன்னும் நீதியே கிடைக்கவில்லை. அதற்காகத்தான் மக்கள் இங்கே வந்து நினைவு கூருகின்றனர்” என அவர் பதிவில் உணர்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.
தெற்கைச் சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவரால் செய்யப்பட்ட இவ்வகை பதிவு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பொதுமக்களிடையே சிந்தனையையும் உரையாடலையும் ஏற்படுத்தியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சிங்கள மக்களின் எண்ணிக்கையில் சிறிது சிறிதாக உயர்வு காணப்படுவதும், நாட்டின் நலனுக்கான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளாக மதிப்பீடு செய்யப்படுகிறது.