ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
இனி இலங்கைப் பெண் ஜனனிக்கு எதிரிகளது அறிவுரைகள் தேவையில்லை!

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 தற்போது 10 வாரத்தை கடந்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து இலங்கைப் பெண்ணான ஜனனி வெளியேறிருந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் இருந்தபோது அதரவும் அறிவுரைகளையும் கூறாதவர்கள் தற்போது அறிவுரைகளை தெரிவித்து வருவதாக முகநூலில் Jeevan Prasad என்பவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட கருத்து,
இந்த சமுதாயம் போராடும் போது உதவாது. இறந்த பின் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே என புலம்பும். அதுமாதிரி பலர் அறிவுரை சொல்லத் தொடங்கியிருக்கிறாங்க.
இனி அவரை வழி நடத்த சரியானவர்கள் இருக்கிறார்கள். தவிர பிக்பாஸ் வீடு அவருக்கு உலகம் என்றால் இப்படி என படிப்பித்து இருக்கும்.
ஜனனி சென்னை வரும் போது அவருக்கு சென்னையும் தெரியாது. தமிழக சூழலும் தெரியாது. இப்போது அவருக்கு சரியான வழி காட்டிகள் உள்ளனர்.
ஜனனி எதிர்காலத்தில் தமிழகம் கடந்து பயணிப்பார். எதிரிகளே ஒருவரது வாழ்வை உயர்த்த வழி செய்கின்றனர்.