நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
கேரளாவில் நடிகர் விஜயை சூழ்ந்த ரசிகர்கள் பட்டாளம்! நாமலில் வாழ்த்தால் ரத்தான படப்பிடிப்பு
தமிழகத்தை போலவே கேரளாவிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாக வைத்துள்ள நடிகர் விஜய் 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவிற்கு சென்றுள்ள நிலையில், அவருக்கு அங்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
இது தொடர்பில் சமூக ஆர்வலர் ஜீவன் பிரசாத் என்பவர் முகநூலில் வெளியிட்ட பதிவு,
இலங்கையில் இருந்து 2010 களில் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா போன போது , அனைத்து கடைகளிலும் விஜய் படம் போட்ட பாடசாலை நோட் புத்தகங்களை காண முடிந்தது.
மலையாளிகள் தமிழருக்கு எதிரானவர்கள் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், விஜய்க்கு இருந்த வரவேற்பு அது பொய் என உணர்த்தியது.
அதேபோல அநேகமான பாடசாலை மாணவ – மாணவிகளது கைகளில் விஜய் படம் போட்ட நோட் புத்தகங்களை அதிகமாகவே காண முடிந்தது. அந்த அளவு இளம் ரசிகர்கள் விஜய்க்கு கேரளாவில் உள்ளனர்.
விஜய்யை அண்ணா என அழைக்கும் குரல்களை கேட்டாலே அது தெரியுதே? கேரள நடிகர்களுக்கே இந்த அளவு ரசிகர்கள் இல்லை.
இலங்கையில் நடத்த இருந்த படப்பிடிப்பு , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் வாழ்த்தால் கேள்விக் குறியாகி ரத்து செய்யப்பட்டது. எனவே இலங்கை போல பின்னணி உள்ள கேரளா படப்பிடிப்புக்கான இடம் தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.