போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் சீருடை
அடுத்த வருடம் முதலாம் தவணையில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான சீருடைத் தேவையில் 70 வீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 30 வீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.