உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சென்றுக்கொண்டிருந்த கார் மீது உருண்டு விழுந்த பாறைகள் ; விபத்தில் சிக்கிய 4 இளைஞர்கள்
ஹல்துமுல்ல நகருக்கு அருகிலுள்ள மலையிலிருந்து பாறைகள் உருண்டு விழுந்ததில், கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற கார் ஒன்று கடுமையாக சேதமடைந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் நான்கு இளைஞர்கள் பயணித்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஆனால் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (ஏப்ரல் 19) காலை 7.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் மலையிலிருந்து பாறைகள் கீழே விழும் அபாயம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.