உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நிலநடுக்கத்தால் கொழும்பின் உயர்ந்த கட்டிடங்களுக்கு பாதிப்பா? வெளியானது தகவல்
கொழும்பில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்துக்கு எதிராக பாதுகாப்பானவை என்றும், அவை அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளதாக நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பதிவாகிய அதிகபட்ச நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் மட்டுமே. இது பெரிதாக எந்த சேதத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.
நவீன கட்டுமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்க எதிர்ப்பு கட்டமைப்பு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. சர்வதேச தரமான பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
சர்வதேச மற்றும் உள்ளூர் பெரிய கட்டுமான நிறுவனங்கள் நிலநடுக்க எதிர்ப்பு தொழில்நுட்பத்தை விரும்பி பயன்படுத்துகின்றன. மிதமான நிலநடுக்கங்களைத் தாங்கும் சக்தி கொழும்பின் வானளாவிய கட்டிடங்களுக்கு உள்ளது.
“பாரிய நிலநடுக்கம் நேர்ந்தாலும், கொழும்பில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.”
நிலநடுக்க ஆபத்து குறைந்த பிராந்தியமாக கருதப்படுகிறது. இருந்தாலும் பாதுகாப்பு கட்டுமான முறைகள் பின்பற்றப்படுகின்றன.
இலங்கையில் பெரும்பாலும் சுனாமி, சூறாவளி போன்றவைகளே முக்கியமான இயற்கை பேரழிவுகளாக பதிவாகின்றன. இருப்பினும், நிலநடுக்க எதிர்ப்பு கட்டுமான முறைகள் நாட்டின் கட்டிடத் தொழில்துறையில் பெரும் முன்னேற்றமாக கருதப்படுகிறது.