போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருடனை அடித்து விரட்டிய சிறுமி VIDEO
செயின் பறிக்க முயன்ற திருடனை அடித்து விரட்டிய சிறுமியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருடனை அடித்து விரட்டிய சிறுமி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் 10 வயது சிறுமி தன் பாட்டியுடன் இரவில் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு பைக்கில் வந்த திருடன் திடீரென பாட்டியின் செயினை பறிக்க முயற்சி செய்தான். ஆனால் 10 வயது சிறுமி செயினை பறிக்க முயன்ற திருடனை அடித்து விரட்டியுள்ளார். இதன் பின் பாட்டி உடனே பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் திருடனை தேடி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிறுமியின் துணிச்சலை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.