யாழிற்கு ரணில் விக்கிரமசிங்க இன்று விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மதியம் விசேட உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அவரு விஜயம் மேற்கொள்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இன்று மாலை 4 மணியளவில் தனியார் விடுதியில் இடம் பெறும் யாழ்ப்பாண அபிவிருத்தி சார் விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதோடு நாளைய தினம் இடம் பெறுகின்ற முக்கியமான நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.