ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
வாடகைக்கு வீடு வழங்கியவர் கைது!

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷான் கடந்த 2ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, பிரதான சந்தேக நபருக்கு வாடகைக்கு வீடு வழங்கிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் ஹிம்புட்டான பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த போது மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி சந்தேகநபரிடம் இருந்து சுமார் 07 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட முல்லேரிய பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.