உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
உடற்பயிற்சி செய்பவர்கள் நீங்கள்? கட்டாயம் இதையும் தெரிஞ்சிகோங்க

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது நமது உடலுக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் இன்றையமையாத ஒன்றாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கான முக்கிய விஷயங்களில் ஒன்று உடற்பயிற்சி செய்வது.
உடற்பயிற்சி என்பது ஜிம்மில் சென்று வொர்க்அவுட் செய்வது மட்டுமின்றி உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் சில முக்கிய நடைமுறைகளைப் பின்பற்றுவதும் ஆகும். இதற்கு உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவ்வாறு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் என நாம் இங்கு பார்ப்போம்.
வொர்க்அவுட்டுக்கு முன் அதிக உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வொர்க் அவுட் செய்வதற்கு முன்னர் அதிக உணவை உட்கொள்வதுஇரைப்பை குடல் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும், இதனால் நீங்கள் மந்தமாக காணப்படுவீர்கள். இதனால் நீங்கள் வொர்க்அவுட் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சோர்வாக உணர்வீர்கள். எனவே உடற்பயிற்சி செய்வதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் சீரான உணவை சாப்பிடுவது சிறந்தது.
காபி போன்ற காஃபின் நிறைந்த உணவை உட்கொள்வது எனர்ஜியை அதிகரித்து உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், அதிகப்படியான காஃபின் நடுக்கம், இதயத் துடிப்பு அதிகரித்தல் மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் உங்கள் எனர்ஜி குறையும். எனவே உடற்பயிற்சி செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன், மிதமான அளவில் காஃபின் உட்கொள்வது நல்லது.
உடல் பயிற்சி செய்பவர்கள் மது அருந்தாமல் இருப்பது நல்லது. ஆல்கஹால் உடலின் சமநிலையை சீர்குலைக்கும், மேலும் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். இதனால் உடல் வொர்க்அவுட் செய்ய முடியாமல் சோர்வாகும். எனவே மது அருந்துவதை அறவே தவிர்த்து விடுங்கள்.
முழு வொர்க்அவுட்டைத் தொடங்கும் முன் சிறிது வார்ம் அப் செய்வது உடலுக்கு நல்லது. இருப்பினும், பெரும்பாலும் மக்கள் கடினமான ஸ்ட்ரெட்சிங் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள், இது உண்மையில் உடலை வலுப்படுத்த உதவுவதை விட தசை வலிமையையும், செயல்திறனையும் குறைக்கிறது. எனவே, டைனமிக் ஸ்ட்ரெச்சிங் சிறிது நேரம் செய்தால் போதுமானது. இது தசைகளை வெப்பமாக்குகிறது மற்றும் உடற்பயிற்சி செய்ய உங்களை தயார்படுத்துகிறது, இதன் விளைவாக அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும்.
நமது உடல் எந்த ஒரு பணியை செய்ய வேண்டும் என்றாலும் போதுமான அளவு நீர்ச்சத்த்து தேவைப்படுகிறது. நீங்கள் நீரிழப்புடன் ஒரு வொர்க்அவுட்டை செய்ய தொடங்கினால் அது ஒட்டுமொத்த செயல்திறனைக் குறைக்கும். மேலும் உங்கள் உடலில் சரியான நீர்ச்சத்து இல்லாததால், உடற்பயிற்சி தொடர்பான காயங்கள் ஏற்படும் அபாயத்தையும் இது அதிகரிக்கிறது. எனவே, நாள் முழுவதும் நீரேற்றமாக இருப்பது முக்கியம். வொர்க்அவுட்டை முடித்தவுடன் டீடாக்ஸ் தண்ணீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை அருந்தி உங்களை நீரேற்றமாக வைத்து கொள்ளுங்கள்.