உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
முடி அடர்த்தியாகவும் நீளமான கருகரு கூந்தல் வேண்டுமா? இந்த சீரம் இருந்தா போதும்
இந்த கால கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடிப்பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. இந்த பிரச்சனையை போக்குவதற்கு பலரும் பலமுறையினை முயற்சி செய்கின்றனர்.
இப்படி அதிகமாக இருக்கும் பிரச்சனைக்காக பலர் எண்ணெய்களை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இருக்கும் அவசர கால கட்டத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது.
இதற்காக நமது முடிவளர்ச்சிக்கு பங்களிக்கும் கலங்களை ஊக்கப்படுத்தும் சீரம்கள் வந்துள்ளது. இதை நாம் நமது முடியின் வேர்க்கால்களில் போட்டு மசாஜ் செய்து வந்தால் கூந்தல் நன்றாக நீளமாக கருகருகென்று வளர்ச்சியடையும்.இது பல பிராண்டுகளில் காணப்படுகிறது.
இதில் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை நிங்கள் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். எனவே இதில் ஐந்து வகையின முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய சீரம்கள் என்னவென்பதை நாம் பார்க்கலாம்.
வெங்காய முடி வளர்ச்சி சீரம்:வெங்காய எண்ணெயால் செறிவூட்டப்பட்ட இந்த சீரம் கொலாஜன் உற்பத்திக்கு தேவையான கந்தகத்தால் நிறைந்துள்ளது. இதன் காரணமாக நமக்கு வலுவான முடி மற்றும் முடியின் உடைவுத்தன்மை குறைகிறது.
இந்த சீரத்தில் சேர்க்கப்படும் பயோட்டின் இது முடி அடர்த்தி மற்றும் பிரகாசத்தை ஊக்குவிக்கிறது. இது தவிர முடி உதிர்வதைக் குறைத்து, கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
Hair Fall Serum:இது முடி இழைகளை உள்ளே இருந்து பலப்படுத்துகிறது, உடைவதைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஒரு தனித்துவமான கலவையுடன் உட்செலுத்தப்பட்ட இந்த சீரம் உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது மற்றும் உங்கள் தலைமுடிக்கு புத்துயிர் அளிக்கிறது.
யாத்திரை முடி வளர்ச்சி சீரம்: இது ரெடென்சில் மற்றும் சா பால்மெட்டோ போன்ற இயற்கையான பொருட்களால் உருவாக்கப்பட்ட சீரமாகும்.இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது, ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறதுஇ.து தவிர முடி பாதியில் உடைந்து விழுவதை குறைக்கிறது.உங்கள் தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர இது உதவும்