வீடியோ காலில் மனைவியை காட்ட மறுத்த கணவரை கத்தரிக்கோலால் குத்திய சக ஊழியர்!

கர்நாடகாவில் வீடியோ அழைப்பின் போது தனது மனைவியைக் காட்ட மறுத்ததால் கணவரை சக ஊழியர் ஒருவர் கோவத்தில் கத்தரிக்கோலால் குத்திய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
பெங்களூரில் எச்.எஸ்.ஆர் லே அவுட்டில் வசிக்கும் 56 வயதான வி.சுரேஷ் என்பவர் கோரமங்களா அருகே வெங்கடாபுரத்தைச் சேர்ந்த 49 வயதான ராஜேஷ் மிஸ்ரா என்பவரை இவ்வாறு கத்தரிக்க குத்தியுள்ளார்.
குறித்த இருவரும் எச்.எஸ்.ஆர் லேஅவுட் செக்டார் II-ல் உள்ள ஒரு ஆடைக் கடையில் தையல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாலை 5.30 மணியளவில் வர்மா தனது மனைவியுடன் தொலைபேசியில் இருந்தபோது சுரேஷ் தலையிட்டு, அவரது மனைவியை பார்க்க விரும்புவதாகக் கூறினார்.
மிஸ்ராவை வீடியோ அழைப்பை மேற்கொள்ள சொன்னார். இதைக் கேட்ட மிஸ்ரா அமைதி இழந்தார், இது அவர்களுக்குள் மோதலுக்கு வழிவகுத்தது. சுரேஷ், கத்தரிக்கோலை எடுத்து மிஸ்ராவை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
மிஸ்ராவை மற்ற சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சுரேஷ் மீது IPC பிரிவுகள் 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்.