உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஈரானிலிருந்து இலங்கை வந்த யுவதிக்கு நேர்ந்த விபரீதம் ; சந்தேக நபர் கைது

கேகாலை, ரம்புக்கன வீதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் வைத்து ஈரானிய யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கேகாலை,ரன்தெனிய மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் குறித்த மசாஜ் நிலைய ஊழியர் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
24 வயதான ஈரானிய யுவதியை ரந்தெனிய பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றுக்கு வரவழைத்து மசாஜ் செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.