உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் மற்றும் கொக்கிளாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் நேற்று கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சீரற்ற காலநிலை காரணமாக கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்று வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.