உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ் கோவிலில் பெண் வேடமிட்டு திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களிடமிருந்து சுமார் 4 பவுண் சங்கிலிகள் அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பெண் வேடமணிந்த ஆண் ஒருவர், மேலும் ஒருவர், 2 பெண்கள்
இவர்கள் யாவரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.