உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கணவர் வேலைக்குச் சென்ற பிறகு சூதாட்ட மையத்தில் சிக்கிய குடும்ப பெண்கள்!

நீர்கொழும்பு தெஹிமல் வத்த பகுதியில் நீண்ட காலமாக ரகசியமாக இயங்கி வந்த சூதாட்ட மையம் ஒன்று சுற்றி வளைத்த காவல்துறையினர், 17 நபர்களை கைது செய்துள்ளனர்.
அவர்களில் 10 ஆண்கள், 7 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
சில குடும்பங்களில், கணவர்கள் வேலைக்குச் சென்ற பிறகு, மனைவிகள் மற்றும் சில நேரங்களில் கணவர்களும் சேர்ந்து பணத்திற்கு பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூதாட்ட மையம், ஒரு வீட்டு உரிமையாளரால் அவரது சொந்த வீட்டில் நடத்தப்பட்டதாகவும், தரகர்களைப் பயன்படுத்தி ரகசியமாக இயங்கியதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
சோதனையின் போது ரூ. 425,000 பணம் , மோட்டார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், சிலர் தங்க நகைகள் அடகு வைத்து விளையாடிய தகவல் பொலிசாரால் கண்டறியப்பட்டது.
இந்த சூதாட்ட மையம் வழக்கமாக இரவு 9:00 மணியளவில் திறந்து அதிகாலை வரை இயங்கியதாகவும், இதனால் சில பெற்றோர் சூதாட்டத்தில் அடிமையாகி, குழந்தைகள் பள்ளிக்குப் போக முடியாத நிலையை அடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.