உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு ; துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

கொழும்பு இரத்மலானை தொடருந்து முனையத்தில் கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதன்போது இடம்பெற்ற மோதலின் போது பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேக நபரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.