Monday March 23, 2026
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
அரசியல் இலங்கை செய்திகள் செய்திகள்

சிறீதரன் எம்.பிக்கு யாழ்.மீனவர் அமைப்பு விடுத்துள்ள சவால்!

January 18, 2025 0 Comment
 சிறீதரன் எம்.பிக்கு யாழ்.மீனவர் அமைப்பு விடுத்துள்ள சவால்!

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் அவரது செயற்பாடுகளை வரவேற்கின்றோம் என  யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார்.

நேற்று சம்மேளனத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது எமது கடற்தொழில் அமைச்சராக உள்ள சந்திரசேகரன் அவர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் கதைப்பதற்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை.

அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு இருந்த போதே இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறாமல் இங்கு வந்தபின்னர்,

முதலமைச்சருடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு தான் கேட்டுள்ளதாகவும், மீனவர்களின் பிரச்சினைகளை கதைக்கப்போவதாகவும் கூறுகின்றார்.

இதெல்லாம் பகட்டுக்கும், எதிர்காலத்தில் மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவும் கூறுகின்றார்.

இந்தியாவில் தேர்தல் நெருங்குகின்றது. தேர்தல் காலத்தில் உங்களுக்கு நேரம் ஒதுக்கி தர மாட்டார்கள். இயலும் என்றால் நீங்கள் நேரத்தினை பெற்று நமது மீனவர்களின் பிரச்சினை குறித்து பேசித் தீருங்கள், அதற்கு பின்னர் நாங்கள் உங்களை வரவேற்கின்றோம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கதைப்பதற்கு, கடந்த காலத்தில் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடமும் கோரிக்கை முன்வைத்தோம் இதன்போது அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்தார்.

இருப்பினும் எமக்கான நேரம் வழங்கப்படவில்லை. அப்படி எமக்கு நேரம் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் எமது பிரச்சினைகளை நேரடியாகவே எடுத்துக்கூறி இருப்போம் என்றார்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email