உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாடொன்றில் காற்றுமாசுபாடால் மூடப்படும் பாடசாலைகள்!

காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் பாகிஸ்தானின் இரண்டாம் பெரிய நகரான லாகூரில் சுமார் ஒரு வாரத்துக்குத் பாடசாலைகளை மூடப்போவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுமார் 14 மில்லியன் மக்கள் வாழும் நகரில் பல நாட்களாக காற்றின் தரம் மோசமாகியிருக்கிறது. அடுத்த 6 நாள்களுக்குக் காற்றின் தரத்தில் மாற்றம் இருக்காது என்று வானிலை முன்னறிவிப்பு காட்டுகிறது.
அதனால் தொடக்கப் பாடசாலைகளை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் பாடசாலைகளில் முகக்கவசம் அணியப்படவேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் கூறியது.