உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நீரிழிவு மருந்துகளுக்காக கடந்த ஆண்டு அரசாங்கம் ரூ.7.3 பில். செலவிட்டுள்ளது

நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஒரு மருத்துவ முறையாக இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவப் பிரிவைத் திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,
நீரிழிவு நோய் தொடர்பான இன்சுலின் உள்ளிட்ட மருந்து வகைகளுக்காக அரசாங்கம் கடந்தாண்டு சுமார் 7.3 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இவற்றுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக வரவு – செலவுத் திட்டம் மூலமான நிதி மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குப் பதிலாக, நோயை முன்கூட்டியே தடுப்பதற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
உடல்நலம் என்பது மருந்துகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. மேலும், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள் மூலமான பயன்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.