உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இந்திய டெஸ்ட் அணியின் கெப்டன் பதவியை நிராகரித்த பும்ரா

இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, அண்மையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவருக்கு பிறகு கேப்டன் பதவிக்கு யார் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தீர்மானிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா, புதிய கேப்டனாக பரிசீலிக்கப்பட்டார். ஆனால், பணிச்சுமை மற்றும் அடிக்கடி காயம் ஏற்படுவது போன்ற காரணங்களால் பும்ரா அந்த பதவியை நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இளம் வீரர் சுப்மன் கில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அவருடன், ரிஷப் பந்த் துணை கேப்டனாக வரக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
பார்டர்-கவாஸ்கர் தொடரில் முதுகு காயத்தால் விலகிய பும்ரா, தற்போது IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இருப்பினும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமாக இருப்பதால் அவர் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.