உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய கூட்டணி உதயம் !

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று (5) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்” சின்னத்தில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் அங்குரார்ப்பம் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளராக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இந்த புதிய கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.