உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பணம் விநியோகித்த வேட்பாளர் அதிரடியாக கைது
நாடளாவிய ரீதியில் இன்று இலங்கையில் 10 ஆவது நாளாளும்னற தேர்தல் இடம்பெற்று வெருகின்றது.
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு இன்று (14) பணம் விநியோகம் செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் குறித்த வேட்பாளர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான வேட்பாளரிடம் ஏற்கனவே 97,200 ரூபாய் பணம் இருந்ததுடன், அந்தப் பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.