உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!

ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது.
அதன்படி அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
இதேவேளை, புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ள உள்ளனர்.
எவ்வாறாயினும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.