Friday October 24, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
அரசியல் இலங்கை செய்திகள் செய்திகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

December 20, 2024 0 Comment
 வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது மக்களின் அரசாங்கம் ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (18) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் புலம்பெயர்ந்தோர் அதேபோல் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி வாழ்பவர்களின் உரிமைகளுக்காகவே சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் போது புலம்பெயர்ந்தோர் அந்நிய செலாவணி ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்திருந்தால் நெருக்கடி மேலும் தீவிரமடைந்திருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன்மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெறும் 3 பில்லியன் டொலர்களை காட்டிலும் புலம்பெயர்ந்து வாழும், தொழில் புரியும் எமது உறவுகளிடமிருந்து அதிகளவான அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் குடும்ப பண அனுப்பல்களின் பெறுமதி 4.48 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.

மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் சற்று பின்னடைவு காணப்பட்டாலும், ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குடும்ப பண அனுப்பலின் பெறுமதி 5,961.6 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இவர்களை மதிக்க வேண்டும். அவர்களின் உழைப்புக்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும். வாகன இறக்குமதியின் போது வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு விசேட சலுகை வழங்கப்படும் என்று கடந்த அரசாங்கம் குறிப்பிட்டது.

இருப்பினும் இதனூடாகவும் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான முறையில் தென்கொரியாவுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்கு பதிலாக இ – 8 முறைமை ஊடாக அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனால் பல சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளன.

இவ்விவகாரம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது மக்களின் அரசாங்கம் ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம் என்றார்

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email