உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
திரு பிரான்சிஸ் ராஜகுமார் – துயர செய்தி

யாழ்ப்பாணம் 37/6 நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne Servion ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் ராஜகுமார் அவர்கள் 09-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் ராஜநாயகம், கலிஸ்ரா(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மகனும், பாலசுப்பிரமணியம் ரஞ்யிதம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,அனித்தா(ரதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அன் றஜந்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,நிலோஜன் அவர்களின் அன்பு மாமனாரும்,சைனா அவர்களின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற ஜான்சன், ஜனதா(சுவிஸ்), நிக்சன்(சுவிஸ்), காலஞ்சென்ற வில்சன், சோபனா(பிரான்ஸ்), சாம்சன்(பிரான்ஸ்), சோபியா(இலங்கை), அன்சன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவகுமார்(சுவிஸ்), இந்திரன்(பிரான்ஸ்), சுபாசினி(சுவிஸ்), ஜீவாநந்தன்(இலங்கை), மோகன்(லண்டன்), ரோகினி(பிரான்ஸ்), அரவிந்தன்(பிரான்ஸ்), நரேந்திரன்(பிரான்ஸ்), ஜெனற்(கனடா), ராகினி(லண்டன்), நிரோஜினி(பிரான்ஸ்), நித்தியா(இலங்கை), ஜீவா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,உதித்சன், பிறிந்தி, யது, சதுசனா, தானியா, லவிசா, எரின், அபிலா, அஜேய், அபிசாய், தர்சினி ஆகியோரின் அன்பு மாமாவும்,பிறையன், பிரசாந், அனோஜி, ஜேசன், ஜிவோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.