உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி !

யாழ். கலட்டி சீனியர் லேனைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் ஈவினையை வசிப்பிடமாகவும், தற்போது கலட்டி சீனியர் லேனை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பரோசாமணி இராசரத்தினம் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி தம்பிராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பராசலிங்கம், தவராஜலிங்கம், செல்வராஜலிங்கம் மற்றும் சிவராஜலிங்கம், ஜெயராஜலிங்கம், மீனாம்பிகை(ராணி),ஜெயபாலன், ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜபூபதி, காலஞ்சென்ற கனகமலர், விஜயலட்சுமி(குஞ்சு), பரமேஸ்வரி, தேவதாஸ், சிவநேசமலர், காங்கேசபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.