உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஒரு நாள் உணவில் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்கிறீர்களா? மருத்துவ ஆலோசனை

நமது உணவில் வைட்டமின் ஏ என்பது மிகவும் தேவையான ஒரு சத்தாகும்.ஒரு குறிப்பிட்ட வளர்சிதை வினைமாற்ற பொருள் வடிவத்தில் விழித்திரைக்குத் தேவைப்படும் உயிர்ச்சத்து ஆகும்.
பல உடல் செயல்முறைகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு சக்தி, இனப்பெருக்கம், கண் பார்வை மேம்படுதல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
சரும ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மற்றும் உடல் செயல்பாட்டிற்கும் உதவுகிறது. தினசரி உணவில் தேவையான அளவு வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் வைட்டமின் ஏ சத்து அடங்கிய உணவுகள் என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வைட்டமின் ஏ எடுத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு சக்தியாகும். இந்த வைட்டமின் ஏ நமது கல்லீரலில் சேமிக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு ஆண்களுக்கு 900 மைக்ரோகிராம் மற்றும் பெண்களுக்கு 700 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் ஏ தேவைப்படுகிறது.
இந்த வைட்டமினில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று ரெட்டினோல் இன்னுமொன்று பீட்டா கரோட்டின் இதில் ரெட்டினோல் என்பது மாட்டிறைச்சி, கோழி போன்ற விலங்கு உணவுகளில் காணப்படுகிறது.
பீட்டோ கரட்டீன் என்பது பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து பெறப்படும் வைட்டமின் ஏ-வின் தாவர அடிப்படையிலான மூலமாகும். இது நேரடியாக உடலுக்கு செல்லாமல் ஆக்ட்டிவ் ஃபார்மாக மாற்றப்பட்டு பின்னர் உடலால் பயன்படுத்தப்படுகிறது.
வளர்சிதைக்கு தேவையான முக்கிய அம்சம் இந்த வைட்டமின் டி தான். எனவே இதை நாளாந்த உணவில் எடுத்துக்கொள்ள மறக்க கூடாது. இந்த வைட்டமினால் குருட்டுத்தன்மை எனப்படும் மாலைக்கண் நோய் வராமல் தடுக்க முடியும்.
எலும்பு மற்றும் பற்களை பலப்படுத்த முடியும். தசை வளச்சியினை ஊக்குவிக்க முடியும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய் வர விடாமல் பாதுகாக்கும். நமது உடலின் இனப்பெருக்க அமைப்பு ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும்.
இந்த வைட்டமின் ஏஇந்த வேலையை செய்வதுடன் கருவில் வளரும் குழந்தையின் நுரையீரல் ஆரோக்கியமாக உருவாக உதவுகிறது. குழந்தைக்கு தாய்பால் சிறுவயதில் போதவில்லை என்றால் அந்த குழந்தை வைட்டமின் ஏ குறைபாட்டிற்கு உள்ளாகும். எனவே நாளாந்த உணவில் வைட்டமின் ஏ எடுத்துக்கொள்வது முக்கியமாகும்.