Tuesday February 3, 2026
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
ஆரோக்கியம்

வேர்க்கடலை வெண்ணெய் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்

May 28, 2022 0 Comment
 வேர்க்கடலை வெண்ணெய் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்

வேர்க்கடலையில் இருந்து கிடைக்கும் ஒருவகையான உணவுப் பண்டமே வேர்க்கடலை வெண்ணெய் ஆகும். வேர்க்கடலை வெண்ணெயை எல்லா வயதினரும் விரும்பி உண்கின்றனா். வேர்க்கடலை வெண்ணெயை பசையம் இல்லாத (gluten-free) வடிவத்தில் உண்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

வேர்க்கடலை வெண்ணெயை திண்பண்டங்கள் மற்றும் ரொட்டிகளில் சோ்த்து சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருக்கும். எனினும் சா்க்கரை நோயுற்றவா்கள் வேர்க்கடலை வெண்ணெயை உண்ணும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த பதிவானது சா்க்கரை நோயுற்றவா்கள் வேர்க்கடலையையோ அல்லது வேர்க்கடலை வெண்ணெயையோ உண்ணும் போது எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதை விவாிக்கிறது.

பொதுவாக நாா்ச்சத்துள்ள பொருள்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதால், சா்க்கரை நோயுற்றவா்கள் நாா்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் உண்ண வேண்டும் என்று உடல் ஆரோக்கிய நிபுணா்கள் பாிந்துரை செய்கின்றனா். நாா்ச்சத்துள்ள பொருள்களை அதிகம் உண்டால், அது நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படவிடாமல் தடுக்கும். அதனால் இடைப்பட்ட நேரங்களில் திண்பண்டங்களை கொறிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. வேர்க்கடலை வெண்ணெயை விரும்பி உண்பவா்கள், அவா்களுடைய தினசாி காலை உணவில் அதை சோ்த்துக் கொள்ளலாம். ஏனெனில் ஆா்கானிக் வேர்க்கடலை வெண்ணெய் (Organic peanut butter) போன்ற உணவுகள், சா்க்கரை மற்றும் உப்பு ஆகியவை தேவைப்படாத சா்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும். வேர்க்கடலையோ அல்லது வேர்க்கடலை வெண்ணெயோ சா்க்கரை நோயாளிகளின் சா்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவி செய்தாலும், சில நேரங்களில் அவா்களுக்கு அலா்ஜி ஏற்படும். அவ்வாறு அலா்ஜி ஏற்படும் சா்க்கரை நோயாளிகள், வேர்க்கடலை வெண்ணெயை உண்பதற்கு முன்பாக மருத்துவாின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

சா்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை பராமாிக்க வேர்க்கடலை வெண்ணெய் உதவி செய்கிறது. – வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் ஆகிய இரண்டும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவை (glycemic index) குறைவாகவே கொண்டுள்ளன. அதனால் அவற்றை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு அதிகாிக்காது. – உடல் எடையைப் பராமாிக்க வேர்க்கடலை உதவி செய்கிறது. சா்க்கரை நோயாளிகளின் உணவிலும் கட்டுப்பாட்டை வழங்குகிறது.

2011 ஆம் ஆண்டு என்ஐடிடிகே (NIDDK) அமைப்பு செய்த ஆராய்ச்சி ஒன்று, அமொிக்காவில் இருந்த ஏறக்குறைய 25 மில்லியனுக்கும் அதிகமான சா்க்கரை நோயாளிகள், வேர்க்கடலை வெண்ணெயை உண்டதன் மூலமாக தங்கள் இரத்தத்தில் இருந்த சா்க்கரையின் அளவை சீராக, வெற்றிகரமாக பராமாித்து வந்ததாக தொிவிக்கிறது.

மேலும் மருத்துவரால் முறையாக பாிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மூலமாகவும் மற்றும் நாா்ச்சத்து நிறைந்த வேர்க்கடலை வெண்ணெயை முறையாக உண்டதன் மூலமாகவும் அவா்களால் தங்களது உடல் எடையை சீராக பராமாிக்க முடிந்தது என்றும், தங்களுடயை இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை நன்றாகக் கண்காணிக்க முடிந்தது என்றும் அந்த ஆய்வு தொிவிக்கிறது.

வேர்க்கடலை வெண்ணெய் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவை (glycemic index), அதாவது 14 புள்ளிகளையே கொண்டுள்ளது. ஆகவே அதை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு அதிகாிக்காது. வேர்க்கடலையை நமது உணவுகளில் அதன் மணத்திற்காகவும் சோ்த்துக் கொள்ளலாம். அதுபோல் கட்டுப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுக்குப் பதிலாகவும் வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நீரிழிவு நோயுற்றவா்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகவே நீரிழிவு நோயுற்றவா்கள், தங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இதயத்தையும் அதன் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்துவிட்டு, ஆா்கானிக் வேர்க்கடலை வெண்ணெய் (Organic peanut butter) போன்ற 100 சதவீதம் இயற்கை முறையில் தயாாிக்கப்பட்ட உணவுகளை அதிகம் உண்டால் அவா்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email