உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இன்னும் சில நாட்களில் பிரமாண்ட திருமணம்.. நெப்போலியன் பகிர்ந்த வீடியோா- குஷியில் தனுஷ்

நெப்போலியனின் மகன் தனுஷுக்கு அடுத்த மாதம் ஜப்பானில் பிரமாண்டமாக திருமணம் நடக்கவிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன்.
சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார். நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர்களில் நெப்போலியனின் மூத்த மகன்- தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் நெப்போலியனின் மகன்கள் இருவரும் டோக்கியோ புல்லட் ரயிலில் ஒசாகாவுக்கு நண்பர்களோடு சென்றார்கள். அங்கு உள்ள விடயங்களை கண்டு கொண்டாடிய காணொளியை நெப்போலியன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், இன்னும் சில நாட்களில் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார். இது குறித்து பேசிய தனுஷ்,“ வலைத்தளங்களில் எனது திருமணம் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் இருந்தது. அவற்றை நான் எப்படியாவது வென்று காட்டுவேன்..” என நேர்மறையான கருத்துக்களை கூறியிருந்தார்.