உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சேலையில் ஜொலிக்கும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா: குவியும் லைக்குகள்

பிக்பாஸ் புகழ் லாஸ்லியா அழகிய சேலையில் ராசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
இலங்கை கிளிநொச்சியில் பிறந்த லாஸ்லியா மரியநேசன், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.
இவர் இலங்கையில் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.
அதன் மூலம் கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பை பெற்று, மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார்.
இவருக்கு என்று தனி படையே உருவானது. அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நியாயத்தை பேசி அதிகமான ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தார்.
அதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்
அதன் பின்பு கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பினார்
கடந்தாண்டு அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சினிமா வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் தற்போது அழகிய சேலையில் செம கிளாமராக போஸ் கொடுத்து நடிகை லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.