உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ட்ரெண்டிங் உடையில் வேட்டையன் பட நடிகை ஹொட் போஸ்… குவியும் லைக்குகள்

நடிகை துஷாரா விஜயன் தீபாவளி தினத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் ட்ரெண்டிங் ஆடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
2019 ஆம் ஆண்டு வெளியான “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் துஷாரா விஜயன்.
அதனை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
இந்த திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, அதன் பின்னர் “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தில் நடித்தன் மூலம் தைரியமான கதாப்பாத்திரம் என்றாலே துஷதரா தான் சரியாக இருப்பார் எனும் அளவுக்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.
அதனை தொடர்ந்து தனுஷ் இயக்கிய “ராயன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வேட்டையன் திரைப்படதில் தைரியமான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்துவிட்டார்.
இந்நிலையில் துஷாரா விஜயன் தற்போது ட்ரெண்டிங் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.