உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
விஜய் உடன் 9 வருடங்களுக்கு முன்னரான சந்திப்பு.. கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்காங்க பாருங்க
9 வருடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துக் கொண்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார். தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வாங்கிய நடிகையான கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருவதாக குடும்பத்தினர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி என்பவரை 15 வருடங்களாக காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அரசியலுக்கு சென்ற பின்னர் பெரிதாக பொது விழாக்களில் பங்கெடுக்காத தளபதி விஜய் கூட இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் – தளபதி விஜய் இருவரும் கடந்த 9 வருடங்களுக்கு முன்னரான சந்திப்பின் போது எடுத்து கொண்ட புகைப்படமொன்று ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அந்த புகைப்படத்தையும், திருமணத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து ட்ரோல் செய்து வருகிறார்கள்