உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அமைச்சர் விஜித ஹேரத்திடம் முறையிட்டுள்ள வெளிநாட்டுகளின் தூதுவர்கள்!

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் நாட்டிற்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரியதால், தமது முதலீடுகளை கைவிட்டதாக தென்கொரிய மற்றும் அவுஸ்திரேலிய தூதுவர்கள் , வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளனர்.
பின்னர் அந்த முதலீடுகளை இந்தியா மற்றும் வியட்நாமுக்கு கொண்டு சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த தென்கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன் ஆகியோரே இந்த முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.