உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அவசர தேவை இல்லாதவர்கள் வராதீர்கள்; கடவுச்சீட்டு தொடர்பில் அறிவிப்பு

வெளிநாட்டு கடவுச்சீட்டு டெண்டர் மற்றும் VFS வீசா சம்பவங்கள் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிய விசாரணைகள் நடைபெறுகின்றன. அதன் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இம்மாதத்தில் அவசர தேவைகளுக்கு தவிர வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற வருவதை தவிர்க்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.