உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இரவு பயங்கர விபத்தில் சிக்கிய கார்… ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

குருணாகல் மாவட்டம், குளியாப்பிட்டிய – பன்னல வீதியில் நுகவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ் விபத்து நேற்று முன்தினம் (06-10-2024) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதியில் பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மற்றும் கொங்கிரீட் பாறையில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது, காரின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.