உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் உள்ள சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
இலங்கையில் உள்ள சாரதிகளுக்கு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
அதன்படி, மலைப்பாங்குப் பகுதிகளில் வாகனம் ஓட்டி செல்லும் சாரதிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலுக்கு ஏற்றபடி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர், மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர கூறுகையில், அண்மைய நாட்களில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றது.
இதனால், மலைப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளது.
எனவே, மலைப்பகுதிகளில் வாகனங்களை ஓட்டும் போது சாரதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுரையை வழங்கினார்.